URBAN LOCAL BODY ELECTIONS

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

-மாநகராட்சி ( Municipal corporations)
- நகராட்சி( Corporation)
- பேரூராட்சி( town panchayat) 


தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் 
 

 தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் (Municipal Corporation) உள்ளன.


"சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, வேலூர், சேலம், ஈரோடு, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி திருநெல்வேலி ,திருப்பூர், கோவை,கரூர், தூத்துக்குடி திண்டுக்கல், ஓசூர், நாகர்கோயில், சிவகாசி, கடலூர்".

 தமிழ்நாட்டில்




21 மாநகராட்சிகள்  
138 நகராட்சிகள் உள்ளன
489 பேரூராட்சிகள்  உள்ளன.
 
ஒவ்வொரு மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சிகளில் தனித்தனியே பல வார்டுகள்  உள்ளன 

 எடுத்துக்காட்டு:

1.சென்னை மாநகராட்சி : 200 வார்டுகள்.

2.பத்மநாபபுரம் நகராட்சி : 21 வார்டுகள்.

3.இரணியல் பேரூராட்சி : 15 வார்டுகள்.

 இவற்றில் வெற்றி பெற்றவர்களே வார்டு உறுப்பினர்கள் 

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.


நேரடித் தேர்தல்


 அனைத்து அமைப்புகளின் வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாவே வாக்களிக்க படுகின்றனர்.

ஒரு அமைப்பில் அதிக வார்டுகள் வென்ற கட்சி அந்த அமைப்பின் வெற்றியாளர்.

 மறைமுக தேர்தல்


மாநகராட்சி மேயர், துணை மேயர்
நகராட்சி  தலைவர், துணைத் தலைவர்
பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்.

இவர்களை வார்டு உறுப்பினர்கள்  தேர்வு செய்வார்கள்


 இட ஒதுக்கீடு


 இந்தியா முழுவதும் 1/3 நேர்முக மற்றும் மறைமுக  தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

எடுத்துக்காட்டு: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

SC, ST பிரிவினர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள் இட ஒதுக்கீடு என்று அழைக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

14 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

SSC GD APPLICATION STATUS CHECK LINK BELOW 👇🏻