இந்திய குடிமைப் பணிகள் TNPSC
இந்திய குடிமைப்பணிகள்
இந்திய குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் காரன்வாலிஸ் பிரபு
இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகளின் ஆரம்பகட்ட வேலைகள்
1. வரிவசூல் செய்வது
2. சட்டங்களை முறையாக செயல் படுத்துதல்
1786 ஆம் ஆண்டு காரன்வாலிஸ் பிரபு இந்திய குடிமைப்பணிகள் அதிகாரிகளின் ஊதியத்தை அதிகப்படுத்தினார்
உலகிலேயே அதிக ஊதியம் பெறுபவர் இவர்களாக இருந்தார்கள்
1798 வெல்லெஸ்லி பிரபு குடிமைப்பணிகள் பயிற்சி நிறுவனம் உருவாக்கினார்
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் மொழி இலக்கியம் அறிவியல் கல்லூரி அமைத்தார்
1806 இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனி இங்கிலாந்தின் ஹெலிபரி என்னுமிடத்தில் கல்லூரி அமைத்து பயிற்சி கொடுத்தது
1833 பட்டயச் சட்டத்தின் மூலம் வில்லியம் பெண்டிங் பிரபு இந்திய குடிமைப் பணிகள் தேர்வை அறிமுகம் செய்தார்.
எனினும் கிழக்கிந்திய கம்பெனி தேர்வு செய்தவர்கள் மட்டுமே தேர்வை எழுதலாம்
1853 பட்டய சட்டத்தின் கீழ்
திறந்த முறை தேர்வு முறையை மெக்காலே குழு கொண்டு வந்தது
1793 முதல் பட்டய சட்டம்
1853 கடைசி பட்டய சட்டம்
1858 குடிமை பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது
1860 அதிகபட்ச வயது இருபத்தி மூன்றாக ஆக்கப்பட்டது
1866 தேர்வு எழுத அதிகபட்ச வயது இருபத்தி ஒன்றாக குறைக்கப்பட்டது
1876 தேர்வு எழுத அதிகபட்ச வயது 19 ஆக குறைக்கப்பட்டது
1861 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய ஆட்சி பணி சட்டம் இயற்றப்பட்டது
இதன்படி
1. இந்திய குடிமையியல் பணி எழுதுபவர் ஏழு ஆண்டுகள் குறைந்தது இந்தியாவில் வாழ்ந்து இருக்க வேண்டும்
2. பிராந்திய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்
3. எனினும் தேர்வு லண்டனில் நடைபெற்றது
1869 ஆம் ஆண்டு சத்தியேந்திர நாத் தாகூர் முதன் முதலில் இந்தியாவில் இருந்து இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றார்.
இவர் ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்
1892 தேர்வு எழுத அதிகபட்ச வயது இருபத்தி மூன்று ஆக மாற்றப்பட்டது
1912 இஸ்லிங்டன் பிரபு தலைமையில் ஒரு அரச ஆணையம் நிறுவப்பட்டது
1917 இந்திய குடிமைப்பணி தேர்வில் இந்திய மயமாக்கல்
1919 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது இதன்படி 33% இந்தியர்களுக்கே இந்திய அரசு குடிமைப் பணி என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
1923 லீ பிரபுவின் குழு IAS IPS IFS
இப்பணிகளை கண்காணிக்க இந்தியாவுக்கான அரசு செயலாளருக்கு உரிமை அளித்தது
1926 October 1 ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது( UPSC)
1927 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது
(TNPSC)
Comments
Post a Comment